தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சைனிக் பள்ளி தரம் உயர்த்த வழக்கு; அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம்

சைனிக் பள்ளி தரம் உயர்த்த வழக்கு; அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம்

சைனிக் பள்ளி தரம் உயர்த்த வழக்கு; அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம்


UPDATED : டிச 10, 2023 12:00 AM

ADDED : டிச 11, 2023 09:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2023 12:00 AM ADDED : டிச 11, 2023 09:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சைனிக் பள்ளியை தரம் உயர்த்தக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசு தரப்பில் பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் அவகாசம் வழங்கி உள்ளது. விசாரணையை, 2024 பிப்ரவரிக்கு தள்ளி வைத்துள்ளது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா, பூலத்துார் கிராமத்தை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:
கடந்த 1962ல், கொடைக்கானலில் சைனிக் பள்ளி துவங்கப்பட்டது. பின், அந்தப் பள்ளி, திருப்பூர் மாவட்டம் அமராவதி நகருக்கு மாற்றப்பட்டது. பாதுகாப்பு துறையில் அதிகாரிகளாக பணி நியமனம் பெறும் வகையில், சைனிக் பள்ளிகளில் முறையான கல்வி மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தியாவில், 28 சைனிக் பள்ளிகள் உள்ளன. அமராவதி நகரில் உள்ள சைனிக் பள்ளியில் படித்தவர்களில், 700 பேர் அதிகாரிகளாக பணி நியமனம் பெற்றுள்ளனர்.அமராவதி நகரில் மட்டுமே நடத்தப்படும் நுழைவு தேர்வை, திருநெல்வேலி, மதுரை, திருச்சி, சென்னை ஆகிய நகரங்களில் நடத்த வேண்டும். தமிழகம் தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை, ரத்து செய்ய வேண்டும். மண்டல அளவில் மருத்துவ தேர்வு நடத்த வேண்டும். தேசிய ராணுவ அகாடமி அதிகாரிகளை வைத்து, மாணவர்களுக்கு நவீன தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்க வேண்டும். பள்ளிக்கான நிதியை, நேரடியாக ஒதுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. சைனிக் பள்ளி சங்கத்தின் செயலர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் மனுவில் கூறியுள்ள பல அம்சங்களை நிறைவேற்றி உள்ளோம். இதுகுறித்து தகவல்கள் அளிக்க, அவகாசம் வேண்டும் என்றார்.தமிழக அரசு தரப்பிலும் சிறப்பு பிளீடர், உரிய தகவலை பெறும்படி உத்தரவிட்டு, விசா ரணையை, 2024 பிப்ரவரி 2க்கு முதல் பெஞ்ச் தள்ளி வைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us