UPDATED : டிச 11, 2023 12:00 AM
ADDED : டிச 12, 2023 12:10 PM
முக்கியத்துவம்
காலணி வடிவமைப்பு மற்றும் உற்பத்தித் துறைகளில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளை வழங்குவதோடு, பேஷன் டிசைன், சில்லறை விற்பனை, பேஷன் பொருட்கள், தோல் பொருட்கள் பிரிவுகளில் தேவையான திறனாளர்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இக்கல்வி நிறுவனம் செயல்படுகிறது. மேலும், குறுகிய கால தொழில்துறை சார்ந்த பயிற்சி மற்றும் திட்டங்களை வழங்குகிறது.கல்வி நிறுவன வளாகங்கள்:
நொய்டா, கொல்கத்தா, ரோடக், ரேபரேலி, சென்னை, சிந்த்வாரா, சண்டிகர், குனா, அங்கலேஷ்வர், ஹைதராபாத், பாட்னாவழங்கப்படும் படிப்புகள்:
இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.டெஸ்., - புட்வேர் டிசைன் அண்டு புரொடக்சன்பி.டெஸ்., - பேஷன் டிசைன்பி.டெஸ்., - லெதர், லைப்ஸ்டைல் அண்டு புரொடெக்ட் டிசைன்பி.பி.ஏ., - ரீடெயில் அண்டு பேஷன் மெர்ச்சன்டைஸ்முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.டெஸ்., - புட்வேர் டிசைன் அண்டு புரொடக்சன்எம்.டெஸ்., - பேஷன் டிசைன்எம்.பி.ஏ., - ரீடெயில் அண்டு பேஷன் மெர்ச்சன்டைஸ்தேர்வு முறை:
இப்படிப்புகளில் சேர்க்கை பெற 2024ம் ஆண்டிற்கான ஏ.ஐ.எஸ்.டி., எனும் ’ஆல் இந்தியா செலக்ஷன் டெஸ்ட்’ எழுத வேண்டும். இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு தனித்தனியாக நடத்தப்படும் இத்தேர்வு தலா 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இத்தேர்வு எழுத https://fddiadmissions.qualcampus.com/ எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்:
ஏப்ரல் 30, 2024ஏ.ஐ.எஸ்.டி., தேர்வு நாள்:
மே 12, 2024விபரங்களுக்கு:
www.fddiindia.com
