UPDATED : டிச 11, 2023 12:00 AM
ADDED : டிச 11, 2023 10:12 AM
அறிவையே இறைவன் என்கிறார் பாரதியார்; எட்டாம் வகுப்பு மாணவர்கள் சாதிக்க வாய்ப்பு காத்திருக்கிறது.அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் தகுதி படிப்புதவித் திட்ட தேர்வு (என்.எம்.எம்.எஸ்.,) தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்படுகிறது. வரும், 2024 பிப்., 3 ம் தேதி இத்தேர்வு நடக்கவுள்ளது.தேர்வுக்கான விண்ணப்பங்கள் தேர்வுத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இணைய வழி விண்ணப்பக் கட்டணம், 50 ரூபாய். மாணவ, மாணவியரின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும், 19ம் தேதி சமர்ப்பிக்க வேண்டும். தலைமை ஆசிரியர், வகுப்பாசிரியர்கள் தேவையான வழிகாட்டுதல்களை எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவருக்கு, ஒன்பது முதல் பிளஸ் 2 வரை படிக்க, ஒவ்வொரு மாதமும், ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவது, குறிப்பிடத்தக்கது.
