தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரையாண்டு தேர்வுகள் அட்டவணை வெளியீடு

அரையாண்டு தேர்வுகள் அட்டவணை வெளியீடு

அரையாண்டு தேர்வுகள் அட்டவணை வெளியீடு


UPDATED : டிச 11, 2023 12:00 AM

ADDED : டிச 12, 2023 12:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2023 12:00 AM ADDED : டிச 12, 2023 12:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில், வங்கக்கடலில், கடந்த மாதம், 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல், தமிழகம் வழியே இம்மாதம், 4ம் தேதி ஆந்திராவுக்கு சென்று, 5ம் தேதி கரை கடந்தது.இந்த புயலால், 24 மணி நேரம் இடைவிடாமல் பெய்த மழை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. கடந்த, 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்துக்கு இணையாக, இந்த முறையும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், நான்கு மாவட்டங்களிலும், வீடுகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் என, அனைத்து தரப்பினருக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டது.இந்நிலையில், வெள்ள சீரமைப்பு பணிகள் நடப்பதால், இன்று துவங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள், வரும், 13ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.இதையடுத்து, புதிய கால அட்டவணையை, பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவொளி நேற்று வெளியிட்டார்.வகுப்பு:
6 முதல் 10 வரைநேரம்:
6 முதல் 8ம் வகுப்பு வரை, காலை, 10:00 முதல் 12:30 மணி வரை; 9 மற்றும் 10ம் வகுப்புக்கு பிற்பகல் 2:00 மணி முதல் 4:30 வரை.தேதி கிழமை பாடம்டிச.,13 புதன் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடம்டிச.14 வியாழன் விருப்ப மொழிப்பாடம்டிச.,15 வெள்ளி ஆங்கிலம்டிச.,18 திங்கள் கணிதம்டிச.,20 புதன் அறிவியல்டிச.,21 வியாழன் உடற்கல்விடிச.,22 வெள்ளி சமூக அறிவியல்பிளஸ் 2 தேர்வு அட்டவணை
நேரம்:
பகல் 1:15 மணி முதல் மாலை 4:30 வரை.தேதி கிழமை பாடம்
டிச.,13 புதன் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்கள்டிச.,14 வியாழன் ஆங்கிலம்டிச.,15 வெள்ளி தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம் மற்றும் நெறிமுறை, கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழிற்கல்வி), அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்.டிச.,18 திங்கள் கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, துணிநுால் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது).டிச., 20 புதன் இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்டிச., 21 வியாழன் வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்டிச., 22 வெள்ளி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னனு இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், துணிநுால் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்.பிளஸ் 1 தேர்வு அட்டவணை:
நேரம்:
காலை 9:30 மணி முதல் பகல், 12:45 வரைதேதி கிழமை பாடம்
டிச.,13 புதன் தமிழ் உள்ளிட்ட மொழி பாடங்கள்டிச.,14 வியாழன் ஆங்கிலம்டிச.,15 வெள்ளி தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம் மற்றும் நெறிமுறை, கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், சிறப்பு தமிழ், மனை அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழிற்கல்வி), அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்.டிச.,18 திங்கள் கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறை, துணிநுால் மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல், நர்சிங் (பொது).டிச.,20 புதன் இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்பு திறன்டிச.,21 வியாழன் வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல்டிச., 22 வெள்ளி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் புள்ளியியல், அடிப்படை மின்னனு இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், துணிநுால் தொழில்நுட்பம், அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us