தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தலைமையாசிரியர்களுக்கு தேர்தல் பணிகளில் விலக்கு சங்க கூட்டத்தில் தீர்மானம்

தலைமையாசிரியர்களுக்கு தேர்தல் பணிகளில் விலக்கு சங்க கூட்டத்தில் தீர்மானம்

தலைமையாசிரியர்களுக்கு தேர்தல் பணிகளில் விலக்கு சங்க கூட்டத்தில் தீர்மானம்


UPDATED : டிச 12, 2023 12:00 AM

ADDED : டிச 12, 2023 09:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2023 12:00 AM ADDED : டிச 12, 2023 09:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
மதுரையில் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்க சிறப்பு கூட்டம் தலைவர் தென்கரை முத்துப்பிள்ளை தலைமையில் நடந்தது. மாவட்ட பொருளாளராக ஊமச்சிகுளம் உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் திவ்யநாதன் தேர்வுசெய்யப்பட்டார்.அமைப்பு செயலாளர் ரகுபதி, செயலாளர் செந்தில், தலைமையாசிரியர்கள் பாஸ்கரன், அருள்மணி, ஜோசப், லிங்கேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில், தவறு செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்தி அவர்களை தண்டிக்கும் அதிகாரம் பள்ளி மேலாண்மை குழுக்களுக்கு வழங்க வேண்டும்.மூன்றாம் பருவ நோட்டுப் புத்தகங்கள் விரைவில் வழங்க வேண்டும். ஆசிரியர்களுக்கு பணிப் பாதுகாப்பு அவசியம். தலைமையாசிரியர்களுக்கு தேர்தல் பணிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.1300 தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பிரச்னை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us