எட்டயபுரத்தில் உள்ள வீட்டில் பாரதியார் விழா கோலாகலம்
எட்டயபுரத்தில் உள்ள வீட்டில் பாரதியார் விழா கோலாகலம்
UPDATED : டிச 12, 2023 12:00 AM
ADDED : டிச 12, 2023 10:24 AM
அ நிறம் | அளவு
எட்டயபுரம்:
தமிழகம் முழுவதும் பாரதியாரின் 142வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பாரதி பிறந்த ஊரான துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அவரது நினைவு மணி மண்டபத்தில் உள்ள பாரதியின் சிலைக்கு, அரசியல் கட்சியினர் மற்றும் தமிழ் அறிஞர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அரசு சார்பில் கலெக்டர் லட்சுமிபதி, விளாத்திகுளம் தி.மு.க., எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், பாரதி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பாரதியார் இல்லத்தில் இருந்து மணிமண்டபத்திற்கு பாரதியார் வேடம் அணிந்த குழந்தைகளின் ஊர்வலமும் நடந்தது.
