தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு தரமான சீருடை: அமைச்சர் விளக்கம்

மாணவர்களுக்கு தரமான சீருடை: அமைச்சர் விளக்கம்

மாணவர்களுக்கு தரமான சீருடை: அமைச்சர் விளக்கம்


UPDATED : டிச 12, 2023 12:00 AM

ADDED : டிச 12, 2023 11:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 12, 2023 12:00 AM ADDED : டிச 12, 2023 11:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெலகாவி:
மாநிலத்தின் பள்ளிகளுக்கு, தரமான சீருடைகள் வழங்கப்பட்டுள்ளது என கர்நாடக பள்ளிகல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா மேலவையில் தெரிவித்தார்.சட்ட மேலவை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் ரவிகுமார் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் மது பங்காரப்பா கூறியதாவது:
நடப்பு 2023 - 24ம் கல்வியாணடில், அனைத்து மாணவர்களுக்கும் பாட புத்தகங்கள், சீருடை வழங்க 397 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஷூ, சாக்ஸ்கள் வழங்க தலா 265 ரூபாய், ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தலா 295 ரூபாய், 9ம், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு 325 ரூபாய் செலவிடப்படுகிறது.ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு சீருடை வழங்கவும், இதே அளவில் செலவிடப்படுகிறது. 2023 - 24ம் ஆண்டில், அரசு தொடக்க பள்ளி, உயர்நிலை பள்ளிகளின் 55 லட்சத்து 43 ஆயிரத்து 828 மாணவ, மாணவியருக்கு, &'வித்யா விகாஸ்&' திட்டத்தின் கீழ், இலவச பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன. 45 லட்சத்து 45 ஆயிரத்து 749 பேருக்கு தலா இரண்டு ஜோடி சீருடை, ஷூ, சாக்ஸ் வழங்கப்பட்டன.முதல் ஜோடி சீருடை, மார்ச் முதல் ஜூன் வரையிலும், ஜூன் முதல் செப்டம்பர் வரை இரண்டாவது ஜோடி சீருடையும் வழங்கப்பட்டன. ஷூக்கள், சாக்ஸ் வாங்க பள்ளி வளர்ச்சி மற்றும் பொறுப்பு கமிட்டிகளுக்கு நிதி வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us