தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி சாலையில் முழுவதும் குப்பை கழிவுகள் நோய் தொற்று அபாயத்தில் மாணவர்கள்

பள்ளி சாலையில் முழுவதும் குப்பை கழிவுகள் நோய் தொற்று அபாயத்தில் மாணவர்கள்

பள்ளி சாலையில் முழுவதும் குப்பை கழிவுகள் நோய் தொற்று அபாயத்தில் மாணவர்கள்


UPDATED : டிச 13, 2023 12:00 AM

ADDED : டிச 13, 2023 09:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2023 12:00 AM ADDED : டிச 13, 2023 09:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்:
மழை முடிந்தும், பள்ளி சாலையில் தேங்கி குப்பை கழிவுகளை அகற்றப்படாமல் இருப்பதால், மாணவர்களுக்கு நோய் தொற்று அச்சம் நிலவுகிறது.அண்ணா நகர் மண்டலம், 104வது வார்டு திருமங்கலம் பகுதியில், பள்ளி சாலை உள்ளது. இந்த சாலையில், தனியார் பள்ளிகள் உட்பட திருமங்கலம் காவல் நிலையம், மாற்றுத்திறனாளிகள் பள்ளி என, ஏராளமாவைகள் இயங்கி வருகின்றனர். இவ்வளவு முக்கியமான சாலை முழுவதும் ஆங்காங்கே குப்பை கழிவுகள் தேங்கி சுகாரா சீர்கேடு நிலவுகிறது.இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் சமூக ஆர்வலர் கோதை ஜெயராமன், 62 கூறியதாவது :
தொடர் மழையால் பள்ளிச் சாலையில் முழுவதும் தண்ணீர் தேங்கியது. தண்ணீர் வடிந்த பின், தற்போது, சாலையில் குப்பைகள் தேங்கியுள்ளது. பள்ளி திறப்பு முன், பள்ளி அருகில் குப்பைகளை சீரமைக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தி இருந்தது. ஆனால் திருமங்கலம் பகுதியில் எந்த நடவடிக்கை எடுக்க வில்லை. இப்பகுதியை மாநகராட்சி முறையாக சுத்தம் செய்வதும், பராமரிப்பதும் கிடையாது.இதுகுறித்து, மண்டல அதிகாரி முதல், கவுன்சிலர், பொறியாளர் உள்ளிட்ட பலடரிம் புகார் அளித்து அலட்சியமாக உள்ளனர். மாணவர்களில் நலனை கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிககாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us