தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொன்னேரி அரசு பள்ளிகளில் அமைச்சர் மகேஷ் ஆய்வு

பொன்னேரி அரசு பள்ளிகளில் அமைச்சர் மகேஷ் ஆய்வு

பொன்னேரி அரசு பள்ளிகளில் அமைச்சர் மகேஷ் ஆய்வு


UPDATED : டிச 13, 2023 12:00 AM

ADDED : டிச 13, 2023 09:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 13, 2023 12:00 AM ADDED : டிச 13, 2023 09:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில், நேற்று பள்ளி கல்வி துறை அமைச்சர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார். இன்று துவங்க இருக்கும் அரையாண்டு தேர்வையொட்டி, மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பேசினார். தொடர்ந்து வகுப்பறைகளுக்கு சென்று ஆய்வு செய்தார்.பின் அமைச்சர் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில், இதுவரை 113 தொகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டேன். இன்று, 114வது தொகுதியாக கும்மிடிப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டேன்.இதுவரை ஆய்வு செய்த பள்ளிகளின் தேவைகள் அறிந்து, விரைந்து செயல்படுத்தி வருகிறோம். கும்மிடிப்பூண்டி பள்ளியில் ஆய்வுக்கூடத்தை மேம்படுத்த கோரிக்கை வைத்துள்ளனர். இரு மாதங்களுக்கு முன், அரசு பள்ளிகளில், 1,000 வகுப்புறைகளை முதல்வர் திறந்து வைத்தார்.அடுத்த மாதம், மேலும், 1,000 வகுப்பறைகள் திறக்கப்பட உள்ளன. நிதி ஒதுக்கீடுக்கு ஏற்ப, ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்.இவ்வாறு அமைச்சர் கூறினார்.தொடர்ந்து, பொன்னேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் வேண்பாக்கம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் அமைச்சர் மகேஷ் ஆய்வு மேற்கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us