UPDATED : டிச 13, 2023 12:00 AM
ADDED : டிச 13, 2023 09:22 AM
அ நிறம் | அளவு
நரிக்குடி:
நரிக்குடி பகுதிகளில் நரிக்குடி, மறையூர், டி.வேலங்குடி ஊராட்சி துவக்கப் பள்ளிகளில் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் காலை உணவை கலெக்டரின் சத்துணவு நேர்முக உதவியாளர் முருகன், உதவி கணக்கு அலுவலர் வில்சன் ஆய்வு செய்தனர்.சமையலறை, உணவுப் பொருட்கள் வைக்கும் அறைகளை பார்வையிட்டனர். தயார் செய்து வைத்திருந்த காலை உணவை மாணவர்களுக்கு வழங்கி, மாணவர்களுடன் அமர்ந்து உணவை சாப்பிட்டு பரிசோதித்தனர். உணவின் தரம் சரியான அளவில் வழங்கப்படுகிறதா என மாணவர்களிடம் கேட்டறிந்தனர். சமையலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினர்.
