மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பயன்பெற மாணவர்களுக்கு அழைப்பு
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பயன்பெற மாணவர்களுக்கு அழைப்பு
UPDATED : டிச 14, 2023 12:00 AM
ADDED : டிச 14, 2023 09:42 AM
ஈரோடு:
இளம் சாதனையாளர்களுக்கு பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன் பெற, தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்கலாம். இதுபற்றி ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியோர், சீர்மரபினர், 30,000 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. https://scholarships.gov.in.in/public/FAQ/topclass school list 2211 comprerssed.pdf என்ற இணைய முகவரியில் தமிழக மாணவர்கள், 3,093 பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும், 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தை சரி பார்த்து ஜன., 15க்குள் பதிவேற்ற வேண்டும்.கடந்த நிதியாண்டில் திட்டத்தில் பயனடைந்தோர், விண்ணப்ப எண், கடவுச்சொல் பதிவு செய்து, விண்ணப்பத்தை புதுப்பித்து கொள்ள வேண்டும்.புதிதாக விண்ணப்பம் செய்வோர், 9 முதல், பிளஸ் 1 வரை படிப்போர், 8 மற்றும் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு, உதவித்தொகை வழங்கப்படும். 60 சதவீதம் மற்றும் அதற்கு மேல், 8 மற்றும் 10ம் வகுப்பில் மதிப்பெண் பெற்ற பட்டியலிப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பயன் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
