உயர் கல்வியில் தமிழகம் முன்னோடி: சபாநாயகர் அப்பாவு பெருமிதம்
உயர் கல்வியில் தமிழகம் முன்னோடி: சபாநாயகர் அப்பாவு பெருமிதம்
UPDATED : டிச 15, 2023 12:00 AM
ADDED : டிச 15, 2023 06:31 PM
கோவை:
கோவை, சித்தாபுதுார் மாநகராட்சி பள்ளியில், கருணாநிதி நுாற்றாண்டு விழா கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கில் பங்கேற்ற, சட்டசபை சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:
இன்றைய கல்வி முறை மாறி விட்டது. லேப்டாப், ஸ்மார்ட் கிளாஸ், வெப் கேமரா வசதிகள் மற்றும் காலை, மதியம் உணவுடன் மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இன்று காலை உணவு திட்டத்தில், 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.பீஹாரில் மக்கள் தொகை அதிகம் இருந்தும், 2.3 சதவீத மாணவர்களே பட்ட படிப்பை முடிக்கின்றனர். தமிழகத்தில் உயர் கல்வியை, 72 சதவீத பெண்களும், 59.4 சதவீத ஆண்களும் பயில்கின்றனர். உயர் கல்வியில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.கருத்தரங்கில் பேசிய மாணவ, மாணவியருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா உட்பட பலர் பங்கேற்றனர்.நிருபர்களிடம் அப்பாவு கூறுகையில், பார்லிமென்டில் யார் கண்ணீர் புகை குண்டு வீசியிருந்தாலும், வன்மையாக தண்டிக்கப்பட வேண்டும். இது, பா.ஜ.,வின் பலவீனத்தை காட்டுகிறது.இலங்கை அம்பன் தோட்டா துறைமுகத்தை, 99 ஆண்டுகளுக்கு சீனா குத்தகைக்கு எடுத்துள்ளது. உளவு கப்பல்கள் அங்கு வருகின்றன. இந்திய பெருங்கடலில், 5,000 மைல்கள் தள்ளி இப்படி நடப்பது, நம் வெளியுறவுத்துறை பலவீனமாக இருக்கிறது என்பதற்கு உதாரணம், என்றார்.
