தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளநிலை உதவியாளர்கள் சி.இ.ஓ.,விடம் வலியுறுத்தல்

இளநிலை உதவியாளர்கள் சி.இ.ஓ.,விடம் வலியுறுத்தல்

இளநிலை உதவியாளர்கள் சி.இ.ஓ.,விடம் வலியுறுத்தல்


UPDATED : டிச 16, 2023 12:00 AM

ADDED : டிச 16, 2023 09:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2023 12:00 AM ADDED : டிச 16, 2023 09:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
கல்வித்துறையில் 10 ஆண்டுகளாக இளநிலை உதவியாளர்களாக பணியாற்றுவவோருக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து மதுரையில் கல்வித்துறை இளநிலை உதவியாளர்கள் சி.இ.ஓ., கார்த்திகாவிடம் மனு அளிக்கப்பட்டது.மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ரமணி பேபி, கலைவாணி, ஆறுமுகம் அளித்த மனு:
தமிழகத்தில் 4500 இளநிலை உதவியாளர்கள், உதவியாளர் பதவி உயர்வுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேல் காத்திருக்கின்றனர். டி.என்.பி.எஸ்.சி., மூலம் நேரடியாக உதவியாளர்கள் நியமிக்கப்படுவதால் பதவி உயர்வுக்கு காத்திருக்கும் சூழல் உள்ளது. நேரடி நியமனத்தை நிறுத்தி எங்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.2020க்கு பின் கணக்கு தேர்வு பாகம் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு மட்டும் இதுவரை ஊக்கத் தொகை வழங்கப்படவில்லை. பிற துறைகள் போல் எங்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us