தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கேள்வித்தாளில் குளறுபடி மாணவர்கள் அதிர்ச்சி

கேள்வித்தாளில் குளறுபடி மாணவர்கள் அதிர்ச்சி

கேள்வித்தாளில் குளறுபடி மாணவர்கள் அதிர்ச்சி


UPDATED : டிச 16, 2023 12:00 AM

ADDED : டிச 16, 2023 02:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 16, 2023 12:00 AM ADDED : டிச 16, 2023 02:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பத்துார்:
திருப்பத்துார் மாவட்டத்தில், 44 மேல்நிலைப்பள்ளிகளில், நேற்று முன்தினம் காலை ஆங்கில தேர்வு நடந்தது. மொத்தம், 100 மதிப்பெண்ணில், 90 மதிப்பெண்ணுக்கு எழுத்து தேர்வு, 10 மதிப்பெண்ணுக்கு செய்முறை தேர்வும் நடத்தப்படும்.காலையில், பிளஸ் 1 மாணவர்களுக்கும், மதியம் பிளஸ் 2 மாணவர்களுக்கும் ஆங்கில தேர்வு நடந்தது. இரண்டு கேள்வித்தாளில், 90 மதிப்பெண்ணுக்கான கேள்வியில், 55 மதிப்பெண்ணுக்கான கேள்விகள் மட்டுமே அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது.அதை பார்த்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முனிசுப்பராயனுக்கு, ஆசிரியர்கள் புகார் தெரிவித்தனர். பின், மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருக்கும்போதே, அவசர அவரமாக, மீதி, 35 மதிப்பெண்ணுக்கான கேள்வித்தாள் தயார் செய்யப்பட்டு, இ- மெயிலில் அனுப்பி, ஜெராக்ஸ் எடுத்து மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.இதுகுறித்து முதன்மை கல்வி அலுவலர் முனிசுப்பராயன் கூறுகையில்,நாங்கள் கேள்வி நகலை சரியாக கொடுத்தோம், அச்சகத்தில் அதை பிரின்ட் செய்யாமல் விட்டு விட்டனர், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us