UPDATED : டிச 16, 2023 12:00 AM
ADDED : டிச 16, 2023 02:07 PM
அ நிறம் | அளவு
சென்னை:
கூடுதல் ஆண்டுகள், பணி அனுபவம் பெற்ற ஆசிரியர்கள் மட்டுமே, மத்திய, மாநில அரசுகளின் நல்லாசிரியர் விருதை பெற முடிகிறது. பணி அனுபவம் பாராமல், திறன் மற்றும் செயல்பாடுகள் அடிப்படையில், அரசு பள்ளி ஆசிரியர்களை ஊக்குவிக்க, கனவு ஆசிரியர் விருதை, தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.இந்த ஆண்டுக்கான கனவு ஆசிரியர் விருதுக்கு, 8,000த்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களின் விண்ணப்ப விபரங்களை ஆய்வு செய்து, 380 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான விருது வழங்கும் விழா, 19ம் தேதி நாமக்கல்லில் நடக்கும் என, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
