தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுய வேலை வாய்ப்பு படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்!

சுய வேலை வாய்ப்பு படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்!

சுய வேலை வாய்ப்பு படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்!


UPDATED : டிச 17, 2023 12:00 AM

ADDED : டிச 17, 2023 10:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2023 12:00 AM ADDED : டிச 17, 2023 10:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியகுளம்:
சான்றிதழ் மற்றும் சுய வேலைவாய்ப்புக்கான படிப்புகளில் சேர விவசாயிகள், மாணவர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை தொலைதூரக் கல்வி இயக்குனர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள் மற்றும் மாணவர்களுக்கான தொலைதூரக் கல்வித் திட்டத்தின் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. முதல்வர் ராஜாங்கம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண் பல்கலை தொலைதூரக் கல்வி இயக்குனர் பாலசுப்பிரமணியன் பங்கேற்றோர்.அவர் பேசியதாவது: 
விவசாய அடிப்படையிலான சான்றிதழ், சுய வேலை வாய்ப்புக்கான படிப்புகள் திறந்தவெளி, தொலைதூரக் கல்வி இயக்குனரகத்தின் மூலம் நடத்தப்படுகிறது. குறிப்பாக தோட்டக்கலை பயிர்களில் தென்னை சாகுபடி, நாற்றாங்கால் பராமரிப்பு, காய்கறிகள் விதை உற்பத்தி, மாடித்தோட்டம், மலர் சாகுபடி, அலங்கார மலர்கள் அமைப்பு போன்ற சுய வேலை வாய்ப்பு படிப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் மாணவர்கள், விவசாயிகள் அதிகளவில் சேர்ந்து பயன் பெறுகின்றனர்., என்றார். முதுநிலை பேராசிரியர் ராஜமாணிக்கம், தோட்டக்கலை பயிர்களின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் முக்கியத்துவம், தயாரிப்பு முறைகள், தரம் பிரித்தல், வியாபாரம் பற்றிய விவரங்கள் குறித்துப் பேசினார். திறந்தவெளி தொழில்நுட்ப கல்வி பாடத்திட்டத்தின் தொகுப்புகள் வெளியிடப்பட்டன. விவசாயிகளின் சந்தேகங்களுக்கு பதில் அளிக்கப்பட்டன. மலரியல் துறை பேராசிரியர் ராஜதுரை நன்றி தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us