தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சரக்கு வாகனத்தில் மாணவர்கள் டிரைவருக்கு டோஸ் விட்ட கலெக்டர்

சரக்கு வாகனத்தில் மாணவர்கள் டிரைவருக்கு டோஸ் விட்ட கலெக்டர்

சரக்கு வாகனத்தில் மாணவர்கள் டிரைவருக்கு டோஸ் விட்ட கலெக்டர்


UPDATED : டிச 17, 2023 12:00 AM

ADDED : டிச 17, 2023 05:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2023 12:00 AM ADDED : டிச 17, 2023 05:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பலுார்:
பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய, பெரம்பலுார் கலெக்டர் கற்பகம், நேற்று மதியம், 2:00 மணியளவில் தழுதாழை சாலையில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அவ்வழியே பள்ளி மாணவ - மாணவியரை, டாடா ஏஸ் வாகனத்தில் அழைத்து செல்லப்படுவதை பார்த்ததும், அந்த வாகனத்தை வழி மறித்து நிறுத்தினார். டிரைவரிடம் விசாரித்த போது, தழுதாழை பகுதி மாணவர்கள், அன்னமங்கலத்தில் அரசு நிதியுதவி பெறும் சிறுமலர் மேல்நிலை பள்ளியில் படித்து வருவதாகவும், அரையாண்டு தேர்வுக்கு அவர்களை அழைத்து செல்வதாகவும் தெரிவித்தார்.வழக்கமாக பள்ளி நேரங்களில் அரசு பஸ்கள் இயக்கப்படுவதாகவும், மதிய நேரம் அரையாண்டு தேர்வு நடைபெறுவதால், மாணவர்களை பள்ளிக்கு அழைத்து செல்வதாகவும் கூறியுள்ளார்.சரக்கு வாகனங்களில், ஆபத்தான முறையில் பள்ளி மாணவ - மாணவியரை அழைத்துச் செல்வது குற்றம். இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என, கலெக்டர் கற்பகம், சரக்கு வாகன டிரைவரை எச்சரித்து அனுப்பினார்.மேலும், மாணவ - மாணவியர் நலன் கருதி, மாற்று வாகனம் ஏற்பாடு செய்து, பாதுகாப்பாக பள்ளிக்கு அனுப்பி வைக்குமாறு அங்கிருந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us