அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம்: ரூ.6.60 கோடி ஒதுக்கீடு
அரசு பள்ளிகளில் காய்கறி தோட்டம்: ரூ.6.60 கோடி ஒதுக்கீடு
UPDATED : டிச 19, 2023 12:00 AM
ADDED : டிச 19, 2023 09:41 AM
தேனி:
தமிழகத்தில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காய்கறித்தோட்டம் அமைக்க ஒரு பள்ளிக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் 13,208 பள்ளிகளுக்கு ரூ.6.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கழிவுநீர் மேலாண்மை, மறுசுழற்சி முக்கியத்துவத்தை மாணவர்களிடம் எடுத்துரைக்க எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழு மூலம் காய்கறித்தோட்டம் அமைக்கப்படவுள்ளது. இதில் மாணவர்கள் கைகழுவும் நீர், சமையலறையில் பயன்படுத்தம் நீரை தோட்டத்திற்கு பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் காய்கறிகளை பயிரிடவும், அதற்கு வேலி அமைத்தல், களைஎடுத்தல், உரமிடுதல், மண்புழு உரம் பயன்படுத்தி தோட்டத்தை பராமரித்தல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த தோட்டத்தில் சாகுபடி செய்யப்படும் காய்கறிகளை மதிய சத்துணவில் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தோட்டக்கலை, வேளாண்மை துறையினரிடம் உரிய ஆலோசனையை குழு உறுப்பினர்கள் பெறலாம். காய்கறித்தோட்டம் 13,208 பள்ளிகளில் அமைக்கப்பட உள்ளது. அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 688 பள்ளிகளுக்கு ரூ.34.4லட்சம் காய்கறித்தோட்டம் அமைக்க ஒதுக்கப்பட்டுள்ளது.
