தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புத்தக பை சுமை குறைப்பு பாடங்கள் இரண்டாக பிரிப்பு?

புத்தக பை சுமை குறைப்பு பாடங்கள் இரண்டாக பிரிப்பு?

புத்தக பை சுமை குறைப்பு பாடங்கள் இரண்டாக பிரிப்பு?


UPDATED : டிச 19, 2023 12:00 AM

ADDED : டிச 19, 2023 09:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 19, 2023 12:00 AM ADDED : டிச 19, 2023 09:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கழுதை பொதி சுமப்பது போன்று, மாணவர்கள் புத்தக மூட்டையை முதுகில் சுமக்கின்றனர். உடல் எடையை மீறி, அதிகமான பாரத்தை சுமப்பதால், அவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.புத்தக சுமையை குறைக்கும்படி, கல்வி வல்லுனர்கள் பல ஆண்டுகளாக ஆலோசனை கூறி வருகின்றனர். வரும் கல்வியாண்டில், புத்தக சுமையை குறைக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.இது தொடர்பாக, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளிப்பை சுமையை குறைக்கும் நோக்கில், வரும் கல்வி ஆண்டில் இருந்து, ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, ஒன்றாக இருந்த பாடப்புத்தகங்கள்இரண்டு பகுதிகளாக பிரித்து அச்சிடப்படும். அரையாண்டு தேர்வு முடியும் வரை, ஒரு புத்தகமும், அதன்பின் ஆண்டு தேர்வு வரை மற்றொரு புத்தகமும் வழங்கப்படும்.இரண்டு பாகங்களாக அச்சிடுவதால், மாணவர்களுக்கு 50 சதவீதம் புத்தக சுமை குறையும். கொண்டு செல்வதும் எளிதாக இருக்கும். இந்த திட்டத்துக்காக 10 கோடி ரூபாய் நிதியுதவி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us