தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிறப்பு குழந்தைகளின் நலன் என்.எல்.சி., சேர்மன் வேண்டுகோள்

சிறப்பு குழந்தைகளின் நலன் என்.எல்.சி., சேர்மன் வேண்டுகோள்

சிறப்பு குழந்தைகளின் நலன் என்.எல்.சி., சேர்மன் வேண்டுகோள்


UPDATED : டிச 19, 2023 12:00 AM

ADDED : டிச 19, 2023 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 19, 2023 12:00 AM ADDED : டிச 19, 2023 10:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெய்வேலி:
சிறப்புக் குழந்தைகளின் நலனின் அக்கறை எடுத்துக்கொண்டு, அவர்கள் வாழ்வில் வெற்றி பெற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என, என்.எல்.சி., சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி வேண்டுகோள் விடுத்தார்.என்.எல்.சி., நிறுவனத்தின் கீழ் செயல்படும் சினேகா வாய்ப்பு சேவைகள் அமைப்பின் சார்பில், தேசிய மனவளர்ச்சி குன்றியோர் தினம் அனுசரிக்கப்பட்டது. அமைப்பின் தலைவி ராதிகா பிரசன்னகுமார் மோட்டுபள்ளி தலைமை தாங்கினார்.என்.எல்.சி., இயக்குனர்கள் மோகன் ரெட்டி, சமீர் ஸ்வரூப், வெங்கடாசலம், கண்காணிப்பு துறை தலைமை அதிகாரி அப்பாக்கண்ணு கோவிந்தராஜன் முன்னிலை வகித்தனர். முதன்மை பொதுமேலாளர் குப்புசாமி வரவேற்றார். என்.எல்.சி., மருத்துவமனை பொது கண்காணிப்பாளர் தாரிணி மவுலி ஆண்டறிக்கை வாசித்தார். டாக்டர் விஜயகுமார் தொகுத்து வழங்கினார்.என்.எல்.சி.,சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி, நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், மனவளர்ச்சி குன்றியோர் அங்கீகாரம் மற்றும் அவர்கள் அனுபவிக்கும் சிரமங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே, மனவளர்ச்சி குன்றியோர் தினத்தின் நோக்கமாகும்.அவர்களின் தனிப்பட்ட தேவைகளை அங்கீகரித்து, அவற்றைப் பூர்த்தி செய்வதன் வாயிலாக, சமுதாயத்தை மேம்படுத்தவும் இந்த நாள் வாய்ப்பளிக்கிறது. சிறப்புக் குழந்தைகள் சவால்களை எதிர்கொண்டு வெற்றி காணும் வகையில், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க ஒவ்வொரு தனி நபரும் முன்வர வேண்டும் என்றார். பள்ளி முதல்வர் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us