தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இளம் சாதனை மாணவருக்கு தேசிய கல்வி உதவித்தொகை

இளம் சாதனை மாணவருக்கு தேசிய கல்வி உதவித்தொகை

இளம் சாதனை மாணவருக்கு தேசிய கல்வி உதவித்தொகை


UPDATED : டிச 19, 2023 12:00 AM

ADDED : டிச 19, 2023 10:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 19, 2023 12:00 AM ADDED : டிச 19, 2023 10:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரி கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.கலெக்டர் பிரபுசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்தோருக்கு, நாடு முழுதும் 30,000 மாணவர்களுக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.நடப்பாண்டு, https://Scholarships.gov.in என்ற இணைய முகவரியில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த, 3,093 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கும், ஒன்பது மற்றும் பிளஸ் ௧ மாணவ - மாணவியர், தாங்கள் எட்டு மற்றும் 10ம் வகுப்புகளில், 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருந்தால், National Scholarship Portal- New Registration என்ற இணைப்பில் சென்று, வரும் 31ம் தேதிக்குள் தங்களது விபரங்களை பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us