தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதிய பள்ளி கட்டடம் கட்டி முடித்தும் திறக்கப்படாத அவலம்

புதிய பள்ளி கட்டடம் கட்டி முடித்தும் திறக்கப்படாத அவலம்

புதிய பள்ளி கட்டடம் கட்டி முடித்தும் திறக்கப்படாத அவலம்


UPDATED : டிச 19, 2023 12:00 AM

ADDED : டிச 19, 2023 10:27 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 19, 2023 12:00 AM ADDED : டிச 19, 2023 10:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருத்தணி:
திருத்தணி ஒன்றியம், வீரகநல்லுார் ஊராட்சிக்குட்பட்ட இஸ்லாம் நகரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது.இங்கு, 167 மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர். இப்பள்ளி மாணவர்கள் நலன்கருதி, ஒன்றிய நிர்வாகம், 2018- 19ம் ஆண்டு மாநில நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ், 11.55 லட்சம் ரூபாய் மதிப்பில் இரு ஸ்மார்ட் கிளாஸ் அறைகள் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.தொடர்ந்து தொடக்கப் பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு டெண்டர் விடப்பட்டு பணி துவங்கியது. பள்ளிக்கட்டடம் கட்டி முடித்து, ஆறு மாதங்களுக்கு மேலாகியும், இதுவரை பள்ளிக்கட்டடம் திறந்து பயன்பாட்டிற்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது.மேலும், பள்ளி மாணவர்கள் அமர்ந்து படிப்பதற்கு போதிய வகுப்பறை வசதியும், கணினி ஆய்வகமும் இல்லாமல் சிரமப்படுகின்றனர். எனவே, மாவட்ட கலெக்டர் மாணவர்களின் நலன்கருதி இஸ்லாம் நகருக்கு நேரில் வந்து பள்ளிக்கட்டடத்தை ஆய்வு செய்து உடனடியாக திறந்து பயன்பாட்டிற்கு விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us