தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அறிவுச் சாரதிகள்... எதிர்கால பாரதிகள்!

அறிவுச் சாரதிகள்... எதிர்கால பாரதிகள்!

அறிவுச் சாரதிகள்... எதிர்கால பாரதிகள்!


UPDATED : டிச 19, 2023 12:00 AM

ADDED : டிச 19, 2023 10:26 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 19, 2023 12:00 AM ADDED : டிச 19, 2023 10:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பு, பட்டம் இதழ் சார்பில், கடந்த, 2018 முதல், மெகா வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இறுதி போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள், அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசாவிற்கு, நேரில் செல்லும் வாய்ப்பு பெறுகின்றனர்.இதற்கு மாணவ, மாணவியரை தேர்வு செய்யும் வகையில், இந்தாண்டுக்கான போட்டி, இந்துஸ்தான் கல்வி குழுமத்துடன் இணைந்து, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த, 150 பள்ளிகளில் நடத்தப்படுகிறது. கோ-லோ நிறுவனம் மற்றும் சத்யா ஏஜன்ஸியினர் இணைந்து வழங்குகின்றனர்.திருப்பூர், பாலாஜி நகர், புதுார் ரோட்டில் உள்ள பாரதி வித்யா பவன் பள்ளியில் நடந்த தகுதிச்சுற்று எழுத்து தேர்வில், 287 மாணவர்கள், ஆர்வமுடன் பங்கேற்று, பொது அறிவு தேர்வெழுதினர். மதிப்பெண் அடிப்படையில், 16 பேர் தேர்வு செய்யப்பட்டு, எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டனர். அவர்களுக்கு இடையே காலிறுதிக்கான போட்டி, மூன்று சுற்று களாக நடத்தப்பட்டது.இதில், பி அணியைச் சேர்ந்த, 8ம் வகுப்பு மாணவர் முகமது அப்சல், 9ம் வகுப்பு மாணவர் நிரஞ்சன் ஆகியோர் அதிக மதிப்பெண் பெற்று, அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளி தாளாளர் செல்வராஜ், பள்ளி முதல்வர் அஸ்வின், செயலாளர் டாக்டர் நளினி, ஒருங்கிணைப்பு ஆசிரியர்கள் குணாளன், மாலதி, மெய்யப்பன் ஆகியோர் பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us