பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நகராட்சி பள்ளியில் திடீர் ஆய்வு
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் நகராட்சி பள்ளியில் திடீர் ஆய்வு
UPDATED : டிச 20, 2023 12:00 AM
ADDED : டிச 20, 2023 09:57 AM
விழுப்புரம்:
விழுப்புரம் நகராட்சி பள்ளியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் நேற்று மாலை 4:00 மணிக்கு திருச்சியில் இருந்து சென்னை சென்றார். விழுப்புரம் வழியாக சென்றவர், மருத்துவமனை வீதியில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று திடீர் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது, ஆசிரி யர்களின் வருகைப் பதிவேட்டை பார்வையிட்டார். பின், மாணவ, மாணவியர்களுக்கான கற்றல் திறன் மேம்பாடு குறித்து கேட்டறிந்து, மாணவர்களுடன் கலந்துரையாடினார். பின், பள்ளிக்குத் தேவையான அடிப்படை வசதி குறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம், கேட்டறிந்தார்.மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு வகுப்பு நடத்தி நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வில் அவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ள ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினார். ஆய்வின் போது லட்சுமணன் எம்.எல்.ஏ., பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தன், உதவி தலைமை ஆசிரியர் சத்தியபாமா உடனிருந்தனர்.
