தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மத்திய அரசு கல்வி உதவித்தொகை இளம் சாதனையாளருக்கு அழைப்பு

மத்திய அரசு கல்வி உதவித்தொகை இளம் சாதனையாளருக்கு அழைப்பு

மத்திய அரசு கல்வி உதவித்தொகை இளம் சாதனையாளருக்கு அழைப்பு


UPDATED : டிச 20, 2023 12:00 AM

ADDED : டிச 20, 2023 10:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2023 12:00 AM ADDED : டிச 20, 2023 10:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்கல்பட்டு:
இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து, கலெக்டர் ராகுல்நாத் அறிக்கை:
இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த, 30,000 மாணவர்களுக்கு, இளம் சாதனையாளர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம், மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளது.அதன்படி, 2023- 24ம் ஆண்டிற்கு, தமிழகத்தைச் சார்ந்த 3,093 பள்ளி மாணவர்களுக்கு, இக்கல்வி உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன் பெற, பெற்றோரின் உச்சகட்ட வருமான வரம்பு, 2.50 லட்சம் ரூபாய். வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள், அடுத்த ஆண்டு, ஜன., 15ம் தேதிக்குள் சரிபார்க்க வேண்டும்.மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்களை, https://scholarships.gov.in மற்றும் http://socialjustice.gov.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us