அடுத்தடுத்து மழை வெள்ள பாதிப்பு: பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா?
அடுத்தடுத்து மழை வெள்ள பாதிப்பு: பொதுத்தேர்வு தேதியில் மாற்றமா?
UPDATED : டிச 20, 2023 12:00 AM
ADDED : டிச 20, 2023 05:24 PM
சென்னை:
10, 11, 12ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளைத் தள்ளி வைக்கும் எண்ணம் எதுவும் இல்லை; திட்டமிட்ட தேதிகளில் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அன்பில் மகேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
மழை, வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் மாணவர்கள் பாடப் புத்தகங்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்படும். தேவையான பாட புத்தகங்கள் கையிருப்பில் உள்ளன. தென் மாவட்டங்களில் பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்த பின்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும்.தென் மாவட்டங்களில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது, பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கான பாதிப்புகள் குறித்து கணக்கீடு செய்த பின்பு மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
