டி.என்.பி.எஸ்.சி., 2024ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு
டி.என்.பி.எஸ்.சி., 2024ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணை வெளியீடு
UPDATED : டிச 20, 2023 12:00 AM
ADDED : டிச 20, 2023 11:02 PM
அ நிறம் | அளவு
சென்னை:
2024ம் ஆண்டிற்கான தேர்வு அட்டவணையை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.அதன்படி, குரூப் 4 தேர்வு ஜூன் மாதம் நடைபெற உள்ள நிலையில், ஜனவரில் இதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. அதேபோல, ஜூலையில் குரூப் 1 தேர்வுகளும், ஆகஸ்ட்டில் குரூப் 2 தேர்வுகளும், நடைபெற உள்ளது என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. 65 பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 1 தேர்விற்கான அறிவிப்பு மார்ச் மாதம் வெளியாக உள்ளது.1294 காலி இடங்கள்
குரூப் 2, 2ஏ பணிகளுக்கு 1294 காலி பணி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த அறிவிப்பு வரும் மே மாதம் வெளியாக உள்ளது.
