சிற்ப கல்லூரி மாஜி முதல்வர் தலைமை ஸ்தபதியாக நியமனம்
சிற்ப கல்லூரி மாஜி முதல்வர் தலைமை ஸ்தபதியாக நியமனம்
UPDATED : டிச 21, 2023 12:00 AM
ADDED : டிச 21, 2023 10:00 AM
மாமல்லபுரம்:
மாமல்லபுரம், ஹிந்து சமய அறநிலையத் துறையின் பொறியியல் பிரிவு தலைமை ஸ்தபதியாக, அரசு சிற்பக் கல்லுாரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பொறுப்பு முதல்வரை நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை, பல நுாற்றாண்டு பழமையான சைவ, வைணவ கோவில்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிர்வகித்து பராமரித்து வருகிறது. கோவில்களை பாரம் பரிய தன்மையுடன் புதுப்பிப்பது தொடர்பாக, உயர் நீதிமன்ற வல்லுனர் குழு அறிவுறுத்தி, அனுமதி வழங்குகிறது.புனரமைப்பு பணிகளில், ஆகமம் மற்றும் தொன்மைத் தன்மையை பாதுகாப்பது கருதி, ஸ்தபதியிடம் ஆலோசனை பெறப்படும்.அதனால், அறநிலையத் துறையின் பொறியியல் பிரிவு தலைமை ஸ்தபதியாக, மாமல்லபுரம், அரசு கட்டடம் மற்றும் சிற்பக்கலைக் கல்லுாரியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பொறுப்பு முதல்வர் ராஜேந்திரனை, தொகுப்பூதியம் அடிப்படையில் தற்காலிகமாக நியமித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
