கூட்டுறவு சங்க உதவியாளர் பணி இணைய தளத்தில் ஹால் டிக்கெட்
கூட்டுறவு சங்க உதவியாளர் பணி இணைய தளத்தில் ஹால் டிக்கெட்
UPDATED : டிச 21, 2023 12:00 AM
ADDED : டிச 21, 2023 10:05 AM
ஊட்டி:
கூட்டுறவு சங்க உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வுக்கு ஹால் டிக்கெட் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் அறிக்கை:
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் கூட்டுறவு நகர வங்கிகள், கூட்டுறவு பண்டகசாலைகள் உள்ளிட்ட தொடக்க கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம், 10ம் தேதி drbngl.in என்ற இணையதளத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, இணையதளம் வழி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு இம்மாதம், 24 ம் தேதி காலை, 10:00 மணி முதல் 1:00 மணி வரை, ஊட்டி அரசு கலை கல்லுாரி எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் https://drbngl.in என்ற இணையதளத்தில் தங்களுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
