தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய திறனாய்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

தேசிய திறனாய்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்

தேசிய திறனாய்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புத்தகம் வழங்கல்


UPDATED : டிச 21, 2023 12:00 AM

ADDED : டிச 21, 2023 05:17 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 21, 2023 12:00 AM ADDED : டிச 21, 2023 05:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பில் மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட 26 ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மத்திய அரசின் தேசிய திறனாய்வு தேர்வு எழுத உள்ளனர். இவர்களுக்கு கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் சார்பாக வழிகாட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்க நுாற்றாண்டு கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ரோட்டரி தலைவர் இமானுவேல் சசிக்குமார் தலைமை தாங்கினார். வட்டார கல்வி அலுவலர் உலகநாதன் முன்னிலை வகித்தார். செயலாளர் செல்வக்குமார் வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) ஜோதிமணி சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரூ.22,100 மதிப்புள்ள 104 வழிகாட்டி புத்தகங்களை வழங்கினார்.தேசிய திறனாய்வு பயிற்சி ஆசிரியர்கள் 26 பேர், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்கம் சார்பாக முன்னாள் தலைவர்கள் செந்தில்குமார், ராமலிங்கம், ராஜேந்திரன், அம்பேத்கர், கந்தசாமி, சேகர், செயலாளர் பாபு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us