கனவு ஆசிரியர் விருது பெற்றவர்கள் கலெக்டரிடம் வாழ்த்து
கனவு ஆசிரியர் விருது பெற்றவர்கள் கலெக்டரிடம் வாழ்த்து
UPDATED : டிச 22, 2023 12:00 AM
ADDED : டிச 22, 2023 09:49 AM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்
: அரசு பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை, கனவு ஆசிரியர் விருது வழங்கப்படும் என, அறிவித்தது.அதன்படி, இவ்விருதுக்கு, ஆன்லைன் வழியாக தேர்வு நடந்தது. வகுப்பறை செயல்பாடுகள், கற்பித்தல் முறை உள்ளிட்டவை குறித்து ஆசிரியர்கள் விளக்கினர். இதைத் தொடர்ந்து, தமிழகம் முழுதும், 380 ஆசிரியர்கள், தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 14 பேர், கனவு ஆசிரியர் விருது பெற்றனர். விருது பெற்ற ஆசிரியர், ஆசிரியைகள், காஞ்சி கலெக்டர் கலைச்செல்வியிடம் நேற்று வாழ்த்து பெற்றனர்.
