தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளியில் சிற்றுண்டி பேரூராட்சி அதிகாரி ஆய்வு

அரசு பள்ளியில் சிற்றுண்டி பேரூராட்சி அதிகாரி ஆய்வு

அரசு பள்ளியில் சிற்றுண்டி பேரூராட்சி அதிகாரி ஆய்வு


UPDATED : டிச 23, 2023 12:00 AM

ADDED : டிச 23, 2023 10:53 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 23, 2023 12:00 AM ADDED : டிச 23, 2023 10:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊத்துக்கோட்டை:
தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயலும் மாணவ - மாணவியருக்கு காலையில் அரசு சார்பில் சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது.திங்கட்கிழமை - ரவா உப்புமா, செவ்வாய் - சேமியா, கிச்சடி, சாம்பார், புதன் - வெண்பொங்கல், சாம்பார், வியாழன் - அரிசி உப்புமா, சாம்பார், வெள்ளி - கோதுமை சம்பா உப்புமா, சாம்பார் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.ஊத்துக்கோட்டை அரசு தொடக்கப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 213 மாணவ, மாணவியர் பயில்கின்றனர். இதில் 180 மாணவ, மாணவியர் காலை சிற்றுண்டி சாப்பிடுகின்றனர். நேற்று காலை திருவள்ளூர் மாவட்ட பேரூராட்சிகள் இணை இயக்குனர் ஜெயகுமார், திடீர் ஆய்வு மேற்கொண்டார்.அப்போது அவர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை சாப்பிட்டு பார்த்தார். மேலும், காலை சிற்றுண்டி சாப்பிடும் மாணவ, மாணவியருக்கு தரமாக, சுவையாக சமைத்து உணவு பரிமாற வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us