UPDATED : டிச 23, 2023 12:00 AM
ADDED : டிச 23, 2023 10:54 AM
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே, பெரிஞ்சேரி அரசு தொடக்கப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு, 25 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். தலைமையாசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இந்த பள்ளிக்கட்டடம் கட்ட, 45 ஆண்டுகள் ஆன நிலையில், கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. வகுப்பறை கட்டடத்தின் சுவர்களில் உள்ள சிமென்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் தெரியும் வகையில் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதைதொடர்ந்து பூண்டி பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், ரவி மற்றும் பொறியாளர்கள், பெரிஞ்சேரி பள்ளியில் நேற்றுஆய்வு நடத்தினர். தற்காலிகமாக சிதிலமடைந்த கட்டடத்தில் இருந்து அருகில் உள்ள மற்றொரு கட்டடத்தில் மாணவர்களை இடம் மாற்றி உள்ளனர்.
