தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஒரு நாள் ஊதியம் வழங்கிய கடம்பத்துார் பள்ளி ஆசிரியர்கள்

ஒரு நாள் ஊதியம் வழங்கிய கடம்பத்துார் பள்ளி ஆசிரியர்கள்

ஒரு நாள் ஊதியம் வழங்கிய கடம்பத்துார் பள்ளி ஆசிரியர்கள்


UPDATED : டிச 23, 2023 12:00 AM

ADDED : டிச 23, 2023 10:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 23, 2023 12:00 AM ADDED : டிச 23, 2023 10:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவள்ளூர்:
கடந்த வாரம் மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை புரட்டி போட்டது.மேலும் தென்மாவட்டங்களான துாத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் கடந்த சில தினங்களுக்கு பெய்த கனமழையால் பெரும் பாதிப்புக்குள்ளானது. இதையடுத்து தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிவாசிகளுக்கு ஆசியர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய விருப்பம் தெரிவித்து ஊதியம் பெற்று தரும் அலுவலரிடம் ஒப்புதல் கடிதம் வழங்கலாம் என தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.கடம்பத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் 28 ஆசிரியர்கள் மற்றும் 4 பணியாளர்கள் என 32 பேர் தங்கள் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்வதற்கான கடிதத்தை பள்ளி தலைமையாசிரியர் ரேவதி என்பவரிடம் ஆசிரியர்கள் சார்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் அருணன் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us