தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி சுற்றுச்சுவர் இடிப்பு: முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு

பள்ளி சுற்றுச்சுவர் இடிப்பு: முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு

பள்ளி சுற்றுச்சுவர் இடிப்பு: முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு


UPDATED : டிச 23, 2023 12:00 AM

ADDED : டிச 23, 2023 10:56 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 23, 2023 12:00 AM ADDED : டிச 23, 2023 10:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

படப்பை:
காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு தனியார் சிலரால் நன்கொடையாக அளிக்கப்பட்ட 7 ஏக்கர் பட்டா நிலத்தில், 1962 முதல் பள்ளி இயங்கி வருகிறது.படப்பை மற்றும் அதை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர். பள்ளிக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தில், பொதுப்பணி துறை அலுவலகம், கால்நடை மருந்தகம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய அரசு கட்டடங்கள் உள்ளன.பள்ளியின் நுழைவாயில் வழியாக இந்த அலுவலகத்திற்கு சென்று வந்தனர். இந்நிலையில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் எதிரே, படப்பை அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை முன்னறிவிப்பின்றி இடிக்கும் பணி நேற்று நடந்தது.வாக்குவாதம்
இதையறிந்த பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், முன்னாள் மாணவர்கள், பள்ளி சுற்றுச்சுவரை ஏன் இடிக்கிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினர். அப்போது, கூட்டுறவு வங்கிக்கு செல்ல சாலை அமைக்க உள்ளோம் என தெரிவிக்கப்பட்டது.அரசு பள்ளி நிலத்தில் அரசு கட்டடங்களே கட்ட கூடாது என, நீதிமன்ற உத்தரவு உள்ள நிலையில், எப்படி சுற்றுச்சுவரை இடித்து தனியாக சாலை அமைக்கலாம் எனக் கூறி, வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.தற்காலிக நிறுத்தம்
சாலை அமைக்கும் இடம் கூட்டுறவு வங்கி பெயரில் உள்ளதாக ஒப்பந்ததாரர் தெரிவித்தார். பட்டாவை காண்பித்த பின் பணிகளை மேற்கொள்ளுங்கள் என, முன்னாள் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் பாதி இடிக்கப்பட்ட நிலையில், சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.சாலை தனியாருக்கு சாதகமாக அமையும்
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: 
படப்பை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தானமாக வழங்கப்பட்ட நிலத்தை திரும்பக் கேட்டு, தானமாக நிலம் அளித்த வாரிசுதாரர்கள் சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, 10 ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பின் அந்த நிலம் பள்ளிக்கு சொந்தம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.இந்நிலையில், பள்ளியின், 31 சென்ட் நிலம், தொடக்க கூட்டுறவு வங்கி பெயரில் அண்மையில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் கல்வி வளர்ச்சிக்கு தானமாக கொடுத்த நிலத்தை, வேறு துறைக்கு பட்டா மாற்றம் செய்வது ஏற்புடையதல்ல. மேலும், அங்கு சாலை அமைத்தால், அந்த சாலை அருகே கட்டப்படும் தனியார் வணிக வளாகத்திற்கு சாதகமாக அமையும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us