UPDATED : டிச 23, 2023 12:00 AM
ADDED : டிச 23, 2023 10:57 AM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில், சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 30 லட்சம் ரூபாய் மற்றும் நுாலக துறையின் பொது நிதியில் இருந்து, 30 லட்சம் ரூபாய் என, மொத்தம் 60 லட்சம் ரூபாய் செலவில் நேரு கிளை நுாலகம் கட்டப்பட்டது.பணி முடிந்து ஓராண்டாக நுாலகம் திறக்கப்படாமல் இருந்த நிலையில், காஞ்சிபுரம் தி.மு.க., எம்.எல்.ஏ., எழிலரசன் நேற்று திறந்து வைத்தார். இதில், மாநகராட்சி மேயர், கமிஷனர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
