UPDATED : டிச 23, 2023 12:00 AM
ADDED : டிச 23, 2023 10:58 AM
அ நிறம் | அளவு
காஞ்சிபுரம்:
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கட்டுப்பாட்டில், காஞ்சிபுரம் சதாவரத்தில் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இங்கு, காலியாக உள்ள கணிதம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களுக்கான பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு உரிய கல்வித் தகுதியுடன் விண்ணப்பிக்கலாம். இங்கு, நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு, மதிப்பூதியமாக 15,000 ரூபாய் வழங்கப்படும்.உரிய கல்வி சான்றிதழ்களுடன், சதாவரத்தில் இயங்கும் அரசு செவித்திறன் குறையுடையோர் பள்ளியில், வரும் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
