தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆதித்யா எல்-1 ஜனவரி 6ல் இலக்கை அடையும்: இஸ்ரோ

ஆதித்யா எல்-1 ஜனவரி 6ல் இலக்கை அடையும்: இஸ்ரோ

ஆதித்யா எல்-1 ஜனவரி 6ல் இலக்கை அடையும்: இஸ்ரோ


UPDATED : டிச 23, 2023 12:00 AM

ADDED : டிச 23, 2023 05:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 23, 2023 12:00 AM ADDED : டிச 23, 2023 05:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6ம் தேதி அதன் இலக்கான லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை சென்றடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.சூரியனை ஆய்வு செய்ய, கடந்த செப்., 2ல், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, ஆதித்யா எல் 1 என்ற விண்கலத்தை, இஸ்ரோ விண்ணில் ஏவியது. இது, பூமியில் இருந்து, 15 லட்சம் கி.மீ., துாரம், 125 நாட்கள் பயணித்து, சூரியனுக்கு அருகில் உள்ள, எல் 1 எனப்படும், லாக்ராஞ்சியன் புள்ளியில் நிலை நிறுத்தப்பட உள்ளது.சமீபத்தில் ஆதித்யா எல் 1 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள, சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் வாயிலாக எடுக்கப்பட்ட சூரியனின் புகைப்படங்களை, இஸ்ரோ வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம் ஜனவரி 6ம் தேதி அதன் இலக்கான லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை சென்றடையும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த லெக்ராஞ்சியன் நிலைப்புள்ளியை அடைந்தவுடன் விண்கலம் அந்த இடத்திலேயே சுற்றிவந்து சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளை ஆய்வு செய்யும். இது அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆய்வு மேற்கொண்டு தகவல்களை பூமிக்கு அனுப்பும். இந்த தரவுகள் சூரியனின் இயக்கம் மற்றும் அது நம் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என சோம்நாத் தெரிவித்தார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us