UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 10:46 AM
தேனி:
சமூகநலன், மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்குழந்தைகள் சமூக முன்னேற்றத்திற்காக பாடுபட்டு சாதனை புரிந்து 13 வயதிற்கு மேற்பட்ட 18 வயதிற்குட்பட்ட பெண்குழந்தைகளுக்கு மாநில அரசு விருது வழங்கப்பட உள்ளது. இந்ந விருதுக்கு தகுதியானவர்கள் http://awards.tn.gov.in என்ற இணைய தளத்தில் டிச., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களில் தலைமை ஆசிரியர், சி.இ.ஓ., மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், உள்ளிட்ட அலுவலர்கள் வாயிலாக முன் மொழிவுகளுடன் சமூகநல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் ஆய்வு செய்து கலெக்டர் பரிந்துரையுடன் மாநில சமூக நல ஆணையரகத்திற்கு அனுப்பப்படும்.தேர்வு குழு தேர்வு செய்பவர்களுக்கு தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜன.,24ல் விருது வழங்கப்படும் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.
