அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள் பாதிப்பு
அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட மாணவர்கள் பாதிப்பு
UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 10:51 AM
திருச்சி:
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிறுமயங்குடியில் அரசு துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை மாணவ - மாணவியர் படிக்கின்றனர். நேற்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்கள், காலை உணவு திட்டத்தின் கீழ், காலை உணவாக ரவா உப்புமா, சாம்பார் ஊற்றி சாப்பிட்டனர். இவர்களில், 20 மாணவ - மாணவியருக்கு வயிற்று வலி ஏற்பட்டது. சிலர் வாந்தி எடுத்தனர். இதையடுத்து மாணவர்கள் அனைவரும், லால்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இதில், 10 மாணவர்கள், 10 மாணவியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சிகிச்சை பெற்ற மாணவர்களை, லால்குடி தி.மு.க., எம்.எல்.ஏ., சவுந்திரபாண்டியன் பார்த்து, ஆறுதல் கூறினர். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணிசாமி அளித்த புகாரின்படி லால்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
