தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/23 புதிய பயிர்ரகங்கள் வெளியிட இறுதிகட்ட ஆய்வுக்கு சமர்ப்பிப்பு

23 புதிய பயிர்ரகங்கள் வெளியிட இறுதிகட்ட ஆய்வுக்கு சமர்ப்பிப்பு

23 புதிய பயிர்ரகங்கள் வெளியிட இறுதிகட்ட ஆய்வுக்கு சமர்ப்பிப்பு


UPDATED : டிச 24, 2023 12:00 AM

ADDED : டிச 24, 2023 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 24, 2023 12:00 AM ADDED : டிச 24, 2023 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலையின் நிர்வாக குழு தேர்வு செய்த, 23 புதிய பயிர் ரகங்கள், புத்தாண்டு புதிய ரக வெளியீட்டிற்காக, இறுதிகட்ட ஆய்வுக்குஅரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை சமயங்களில் வேளாண் பல்கலை சார்பில், புதிய பயிர்ரகங்கள், தொழில்நுட்பங்கள் வெளியிடப்படும். கடந்தாண்டு 20க்கும் மேற்பட்ட புதிய ரகங்கள் வெளியிடப்பட்டன.நடப்பாண்டில், வேளாண் பல்கலை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட, 34 புதிய பயிர்ரகங்கள், தொழில்நுட்பங்கள் பல்கலை நிர்வாக குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், தகுதியான ரகங்கள் தேர்வு செய்யப்பட்டு, பட்டியல் அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.துணைவேந்தர் கீதாலட்சுமி கூறுகையில், பல்வேறு பிரிவுகளில், 34 புதிய பயிர்ரகங்கள் பல்கலை விஞ்ஞானிகளிடம் இருந்து சமர்ப்பிக்கப்பட்டன. பல்கலை நிர்வாக ஆய்வுக்குழு, 23 தகுதியான ரகங்களை தேர்வு செய்த பட்டியலை, அரசின் இறுதி முடிவுக்கு சமர்ப்பித்துள்ளோம். அரசின் இறுதிபட்டியலை வெளியிடும் போது, முழுமையான தகவல்கள் தெரிவிக்கப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us