UPDATED : டிச 24, 2023 12:00 AM
ADDED : டிச 24, 2023 09:53 PM
சென்னை:
டிப்ளமா படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்கள் மீண்டும் சேர்ந்து கொள்ள, வரும், 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.இதுகுறித்து, தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்ட அறிவிப்பு:
பாலிடெக்னிக் கல்லுாரிகளில் சேர்ந்து, ஆறு ஆண்டுகளுக்குள் உள்ளவர்கள், கல்லுாரிக்கான கட்டாய வருகைப்பதிவு குறைவால், தேர்வு எழுத முடியாமல், படிப்பை பாதியில் விட்டவர்கள், மீண்டும் கல்லுாரியில் சேர்ந்து கொள்ளலாம்.இதற்கு, https://readmission.tnpoly.in/ என்ற இணையதளத்தில், 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழி விண்ணப்ப பதிவு செய்தால் மட்டும் போதும். கூடுதல் விபரங்களை, அருகில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
