மூன்றாம் பருவ பாடப்புத்தகம் விரைவில் பள்ளிகளுக்கு வினியோகம்
மூன்றாம் பருவ பாடப்புத்தகம் விரைவில் பள்ளிகளுக்கு வினியோகம்
UPDATED : டிச 25, 2023 12:00 AM
ADDED : டிச 25, 2023 10:44 AM
கோவை:
அரையாண்டு விடுமுறை முடிவதற்குள், மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களை, பள்ளிகளுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முப்பருவ கல்வி முறை நடைமுறையில் உள்ளது. இரண்டாம் பருவத்திற்கான தேர்வுகள் முடிந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2ம் தேதி, பள்ளிகள் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த விடுமுறை நாட்களில், மூன்றாம் பருவ பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், 595 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள், 148 உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு,நோடல் மையம் மூலமாக, பாடப்புத்தகங்கள் நேரில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பள்ளி திறந்த நாளன்றே, புத்தகங்களை மாணவர்களுக்குவழங்க வேண்டுமென்பதால், இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முதல், இரண்டாம் பருவத்திற்கான எண்ணிக்கை அடிப்படையில், மூன்றாம் பருவ பாடப்புத்தகங்கள், எமிஸ் தகவல் அடிப்படையில், பிரித்து வைக்கப்பட்டுள்ளன.இதை பள்ளிகளுக்கு வழங்கும் பணி, விரைவில் துவங்கப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
