38 நிமிடங்களில் 108 முறை சூரிய நமஸ்காரம் 1,100 மாணவ, மாணவியர் உலக சாதனை
38 நிமிடங்களில் 108 முறை சூரிய நமஸ்காரம் 1,100 மாணவ, மாணவியர் உலக சாதனை
UPDATED : டிச 25, 2023 12:00 AM
ADDED : டிச 25, 2023 05:38 PM
அரூர்:
அரூரில், ஒரே இடத்தில், 1,100 மாணவ, மாணவியர், 38 நிமிடங்களில், 108 முறை சூரிய நமஸ்காரம் செய்து உலக சாதனை படைத்தனர்.தர்மபுரி மாவட்டம், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்திலுள்ள சிறு விளையாட்டு அரங்கில், யோகா உலக சாதனை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த, 1,100 மாணவ, மாணவியர் ஒரே நேரத்தில், 38 நிமிடங்களில் சூரிய நமஸ்காரத்தை, 108 முறை செய்தனர். இதை உலக சாதனை என அறிவித்து, நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் என்ற நிறுவனம் சார்பில், மாணவ, மாணவியர் மற்றும் அவர்களை வைத்து யோகாசனம் செய்த சக்திவேல் என்பவருக்கும், பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.இதற்கு முன், ஒரே இடத்தில் பள்ளி மாணவ, மாணவியர் சூரிய நமஸ்காரம், 27 நிமிடங்களில், 50 முறை செய்திருந்தனர். நிகழ்ச்சியில், அரூர், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சம்பத்குமார், டவுன் பஞ்., தலைவர் இந்திராணி, துணைத்தலைவர் தனபால் உள்பட, பலர் கலந்து கொண்டனர்.
