ஊழல் புகாரில் சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது
ஊழல் புகாரில் சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் கைது
UPDATED : டிச 26, 2023 12:00 AM
ADDED : டிச 26, 2023 06:06 PM
சேலம்:
போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது மற்றும் அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது தொடர்பாக எழுந்த புகாரில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாக புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் படி சேலம் கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்இதனையடுத்து, அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது, தனி நிறுவனங்கள் துவங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டில் துணைவேந்தர் ஜெகநாதனை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், துணைவேந்தராக உள்ள ஜெகநாதன் தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து பூட்டர் என்ற தனி நிறுவனத்தை துவக்கியது தெரியவந்துள்ளது.