எண்ணும் எழுத்தும் பயிற்சி வாசிப்பு மேம்பாட்டுக்கு முயற்சி
எண்ணும் எழுத்தும் பயிற்சி வாசிப்பு மேம்பாட்டுக்கு முயற்சி
UPDATED : டிச 27, 2023 12:00 AM
ADDED : டிச 27, 2023 10:39 AM
பொள்ளாச்சி:
எண்ணும் எழுத்தும் மூன்றாம் பருவத்திற்கான பாடங்கள், எழுத்து மற்றும் வாசிப்பு பயிற்சிக்கு, அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக, கருத்தாளர்கள் தெரிவித்தனர்.ஒவ்வொரு பாடத்திற்கு பின், இணைத்து அச்சிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடத்தை முடித்ததும், மாணவர்கள் பயிற்சித்தாளை நிரப்புவதன் அடிப்படையில், பாடக்கருத்துகள் முழுமையாக சென்றடைந்ததா என பரிசோதிக்கப்படுவதாக, இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.மாவட்ட கருத்தாளர் ஒருவர் கூறுகையில், வட்டார அளவிலான பயிற்சி குறித்த அட்டவணை வெளியிடப்படவில்லை. மூன்றாம் பருவத்தில், எழுத்து, வாசிப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.அந்தந்த வகுப்புக்கான கற்றல் அடைவை மாணவர்கள் பெற்றிருக்கிறார்களா என, இப்பருவ இறுதியில், தேர்வு நடத்தி பரிசோதிக்கப்படும். மாதத்தேர்வுகளும் வினாத்தாள் வழங்கி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.