UPDATED : டிச 27, 2023 12:00 AM
ADDED : டிச 27, 2023 06:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரும்பாக்கம்:
அரும்பாக்கம் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை மற்றும் அரும்பாக்கம் அரசினர் சித்த மருத்துவக் கல்லுாரி சார்பில், சித்தர் திருநாளை முன்னிட்டு, சித்த மருத்துவ கண்காட்சி இன்று துவக்கம்.அரும்பாக்கம் சித்த மருத்துவமனை வளாகத்தில், இரண்டு நாட்கள் கண்காட்சி நடக்கிறது. இதில், 400க்கும் மேற்பட்ட மூலிகை கண்காட்சி, பாரம்பரிய உணவு கண்காட்சியும் நடக்கிறது.அத்துடன், நோயின்றி வாழ சித்த வாழ்வியல் முறை, சித்த யோகமுறைகளின் செயல் விளக்கம் மற்றும் சித்த மருத்துவ புற மருத்துவ முறைகளின் விளக்கம் அளிக்கப்படுகிறது. இன்று துவங்கும் கண்காட்சியை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.