சிறுதானியங்களில் பிரியாணி சித்தா மருத்துவமனையில் கண்காட்சி
சிறுதானியங்களில் பிரியாணி சித்தா மருத்துவமனையில் கண்காட்சி
UPDATED : டிச 28, 2023 12:00 AM
ADDED : டிச 28, 2023 10:59 AM
சென்னை:
அரும்பாக்கம், சித்தா மருத்துவமனை வளாகத்தில், 7வது சித்தர் திருநாள் தினத்தையொட்டி, இரண்டு நாள் கண்காட்சி நேற்று துவங்கியது. இதில், வீடுகளில் வளர்க்கக்கூடிய வகையிலான, 500க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.சித்தா மருத்துவ கல்லுாரி முதல்வர் கனகவள்ளி கூறியதாவது:
இந்த கண்காட்சியில், தொற்றும் மற்றும் தொற்றா நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்வது குறித்த விழிப்புணர்வும் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட சிறுதானியங்களில், பிரியாணி போன்ற உணவுகள் தயாரிப்பது, மைதா மாவு பயன்படுத்தாமல் ஐஸ்கிரீம் போன்றவை தயாரிப்பது குறித்து விளக்கப்படுகிறது.டீ, காபி போன்றவற்றுக்கு மாற்றான சூப் வகைகள், 100 நெல் வகைகள், அதன் பயன்கள் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்தி வருகிறோம். சித்த மருத்துவம் அளிக்கும், 32 வகையான புற மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்தும், மக்களுக்கு தெரிவித்து வருகிறோம். இந்த கண்காட்சியில், பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.