UPDATED : டிச 28, 2023 12:00 AM
ADDED : டிச 28, 2023 10:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காஞ்சிபுரம்:
சமூக நலத்துறை சார்பில், திருநங்கைகளை கவுரவிக்கும் வகையில், 2023- 24ம் ஆண்டுக்கான திருநங்கையர் தினமான, ஏப்., 15ல், மாநில அளவில், திருநங்கை ஒருவருக்கு முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது.விருதுக்கு விண்ணப்பம் செய்வோர், குறைந்தது ஐந்து திருநங்கையர் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது. இவ்விருது பெறுவோருக்கு, 1 லட்சம் ரூபாய் மற்றும் சான்று வழங்கப்படும்.விருதுக்கு தகுதி உடைய திருநங்கையர், 2024 பிப்., 5க்குள், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சமூக நல அலுவலகத்தில், விண்ணப்பத்தை நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.