UPDATED : டிச 28, 2023 12:00 AM
ADDED : டிச 28, 2023 11:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை:
காளையார்கோவிலில் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி மாணவியர் விடுதி புதிய கட்டடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். முதல்வர் ஸ்டாலின் புதிய கட்டடத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். மாவட்ட ஆதிதிராவிட நல அலுவர் சிவக்குமார், ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி கலந்து கொண்டனர்.